வார பலன் : கன்னி

கன்னி


  தோல்விகளைக் கண்டு துவளாமல் விசையுறு பந்துபோல் மீண்டும் எழும் நீங்கள், கடினமாக உழைத்து முன்னேறத் துடிப்பவர்கள். ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்கள், உடன்பிறந்தவர்கள் உங்களின் தியாக உணர்வைப் புரிந்துக் கொள்வார்கள். செவ்வாய் 11-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். யோகாதிபதி சுக்ரன் வலுவிழந்திருப்பதால் திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சூரியனும் 12-ல் நிற்பதால் தூக்கமின்மை, டென்ஷன், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். குருபகவான் 12-ம் வீட்டில் நிற்பதால் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். ஷேர் மூலமும் பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் என அடுத்தடுத்து சுபச் செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். கன்னிப்பெண்களே! பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். உங்களை சிலர் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். வேலைச்சுமை அதிகரிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 25, 27 அதிஷ்ட எண்கள்: 2, 4 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், சிவப்பு அதிஷ்ட திசை: வடக்கு