வார பலன் : மீனம்

மீனம்




  ஊரே ஒரு குடையின் கீழ் எதிர்த்து நின்றாலும் கொண்ட கொள்ளைக்காகவும், உரிமைக்காகவும் அஞ்சாமல் போராடும் வேங்கைகள் நீங்கள் தான். வீண் விவாதங்களை நீங்களே தவிர்ப்பீர்கள். வெளிட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 5-ல் செவ்வாய் நிற்பதால் வீண் டென்ஷன், இரத்த அழுத்தம் வந்து செல்லும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். 6-ல் சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் செல்வாக்கு, புகழ் கூடும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். 6-ல் சுக்ரன் மறைந்திருப்பதால் மனைவியுடன் மனக்கசப்பு, டென்ஷன், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். குருபகவான் 6ல் மறைந்திருப்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறையாகி வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் ஒளிவு, மறைவில்லாமல் பழகுவது நல்லது. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். குடும்பத்தில் மாற்றி மாற்றி மருத்துவச் செலவுகள் வரும். அரசியல்வாதிகளே! உங்கள் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவார்கள். கன்னிப் பெண்களே! ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். தள்ளுபடி விற்பனை மூலமாகவும், விளம்பர யுக்திகளை கையாண்டும் லாபம் அதிகரிக்க செய்வீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதல் கிடைக்கும். கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் பெருகும். அமைதி காக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 29 அதிஷ்ட எண்கள்: 1, 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, க்ரீம்வெள்ளை அதிஷ்ட திசை: தென்மேற்கு