மகரம்
மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே! புதன் 22ம் தேதி முதல் 9-ல் அமர்வதால் மனைவிவழியில் ஆதாயம் உண்டு. அவரின் உடல் நலம் சீராகும். உறவினர்கள் மதிப்பார்கள். 7-ல் செவ்வாய் நிற்பதால் மகனுக்கு உயர்கல்வி, உத்யோகம் அயல்நாட்டில் அமையும். 8-ல் சூரியன் மறைந்திருப்பதால் உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தையும் அறியும் வாய்ப்பு வரும். 8-ல் சுக்ரன் மறைந்தாலும் பணப்புழக்கம் உண்டு ஆனாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் கடன் வாங்க வேண்டி வரும். கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் மரியாதைக் கூடும். ராசிநாதன் சனிபகவான் 10-ல் தொடர்வதால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். கடன் பிரச்னை முடிவுக்கு வரும். குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால் கணவன்-மனைவிக்குள் அன்யோனம் அதிகரிக்கும். என்றாலும் வீண் சந்தேகத்தால் அவ்வப்போது விவாதங்கள் வரும். சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. அடிக்கடி வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல் வெடிக்கும். கன்னிப்பெண்களே! புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் யாருக்கும் அதிக முன் பணம் தர வேண்டாம். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். முன்பு உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி இப்போது உங்களை ஆதரிப்பார். கலைத்துறையினர்களே! போட்டிகள் அதிகரிக்கும். முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 29 அதிஷ்ட எண்கள்: 8, 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ் அதிஷ்ட திசை: வடகிழக்கு