வார பலன் ; மிதுனம்

 
 


 மிதுனம்



 


கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வீர்கள்! உங்கள் ராசிநாதன் புதன் 4-ல் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புது வேலை அமையும். பக்குவமாகப் பேசி சாதிப்பீர்கள். சூரியனும், சுக்ரனும் 3-ல் அமர்ந்திருப்பதால் முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டததில் ஒன்று நிறைவேறும். இளைய சகோதர வகையில் நன்மை உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். கல்யாண பேச்சு வார்த்தை கைக்கூடும். 2-ல் செவ்வாய் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்துப் போகும். அடிவயிற்றில் வலி, வீண் டென்ஷன் வந்துப் போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். குருபகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்பத்தினர் உங்களின் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாமல் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 29 அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, இளம் சிவப்பு அதிஷ்ட திசை: மேற்கு