நீதி – அன்பு
உபநீதி – கருணை
அப்துல்லா என்ற மனிதன் ஒரு முறை மெக்காவில் உள்ள மசூதியில் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்திற்கு நடுவில் இரு தேவதைகள் பேசி கொண்டிருப்பதைக் கேட்டு விழிப்படைந்தான். இருவரும் உலகத்தில் உள்ள புண்ணியவான்களின் பட்டியல் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னபடி சிகந்தர் நகரத்தில் இருக்கும் மெஹ்பூப் என்ற மனிதன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லாவிட்டாலும் சிறந்த மனிதன் என்ற பட்டியலில் முதலாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட அப்துல்லா சிகந்தர் நகருக்குச் சென்று பார்க்கும் பொழுது மெஹ்பூப் காலணி தைப்பவர் என்று தெரிய வந்தது. மிக ஏழ்மையான மனிதன். ஒரு வேளை உணவிற்குக் கூடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். தியாகம் செய்து சில செப்புக் காசுகளைச் சேர்த்து வைத்திருந்தான்.
ஒரு நாள் இந்த காசுகளைச் செலவழித்து கர்ப்பமாக இருந்த தன் மனைவிக்குப் பிடித்த ஒரு தின்பண்டத்தைத் தயாரித்து அவளை சந்தோஷப் படுத்த் வேண்டும் என்று எண்ணினான். வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தான். இந்த நிலையைக் கண்ட மெஹ்பூப் எண்ணத்தை மாற்றிக் கொண்டு உணவைப் பானையுடன் பிச்சைக்காரனிடம் கொடுத்து விட்டான் அவன். பசியுடன் உணவைச் சாப்பிடுவதைக் கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான். அவனுக்கு இது ஒரு சிறந்த ஸ்தானத்தைக் கொடுத்தது. பல கோடி பொருட்செலவைச் செய்து தீர்த்த யாத்திரைக்கு என மெக்கா செல்லும் பக்தர்களுக்குக் கிடைக்காத புண்ணியம் இவருக்குக் கிடைத்தது. கடவுள் நம் செயல்களுக்குப் பின் இருக்கும் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கிறார். வெளித் தோற்றத்திற்கு அல்ல.
நீதி:
நாம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது தரம் தான் முக்கியம், அளவு இல்லை. அன்புடன் செய்யும் சிறிய உதவிகள் அன்பல்லாது செய்யும் பல கோடிகளைக் காட்டிலும் சிறந்தது.